Monday, March 26, 2012

உலக வங்கியின் பாராட்டையும் பெற்று தொழிலதிபரான ஏழை மாணவன்

தனது இளமைக் காலத்தில் குடிசைப் பகுதியில் வறுமையில் வாடிய சிறுவன் ஒருவன், இன்று ஒரு பெரிய உணவுப் பொருள் தொழில் முனைவராக விளங்குகிறார். அவரது தொழில் ஆர்வத்துக்கும், தலைமைப் பண்புக்கும் அவரை உலக வங்கி பாராட்டிப் பெருமைப் படுத்துகிறது.
உலகில் உள்ள இளைஞர்களை யெல்லாம் பரந்த சமூக முன்னேற்றப் பணியில் ஈடுபடுத்தும் நோக்கம் கொண்ட உலக வங்கி ஆண்டு தோறும் நடத்தும் அதன் முக்கியமான உலக இளைஞர் மாநாட்டில் பெருமைப்படுத்தப்பட அழைக்கப்பட்டிருக்கும் மூன்று இளை ஞர்களில் சென்னையைச் சேர்ந்த சரத்பாபு ஏழுமலையும் ஒருவராவார்.
இந்த ஆண்டு இளைஞர் மாநாட்டின் கோட்பாடு, புதிய கண்டு பிடிப்புகள் மூலமும், அனைவரையும் இணைப்பதன் மூலமும் பிரச்சினை களுக்குத் தீர்வு காணல் என்பதாகும்.  இணையதளத்தின் மூலம் ஒளிபரப்பப்படும் இந்த மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தனது பள்ளிக் கல்வியைத் தொடர் வதும் கூட வறுமையின் காரணமாக சரத் பாபுவுக்கு எளிதாக இருக்கவில்லை. ஆனால், இன்றோ பலகோடி ரூபாய் வணிகம் செய்யும் புட் கிங்  உணவு விடுதியையும் (குடிடின முபே சுநளவயரசயவே),  தயாரிப்பு உணவு வணிகத்தையும் (உயவநசபே ரெளநேளள) செய்து வரும் இவரின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். சென்னை மடிப்பாக்கம் குடிசைப் பகுதியில் பிறந்த சரத்பாபுவின் தாய் சத்துணவு மய்யப் பணியாளராகப் பணி யாற்றி வந்தார். சரத்பாபுவுக்கு இரண்டு அக்காக்கள், இரு தம்பிகள் இருந்தனர். அய்ந்து குழந்தைகளை வளர்க்கத் தானே தனியாகப் போராடியவர் அவரது தாய்.  காலையில் சாலையோரத்தில் இட்டலி சுட்டு விற்றும், பகலில் சத்துணவு மய்யத்தில் வேலை செய்தும், இரவில் முதியோர் பள்ளி ஆசிரியராகவும் பணி யாற்றி தனது குழந்தைகளை அவர் வளர்த்தார்.
தாயின் தியாகத்தை நன்கு உணர்ந்து கொண்ட சரத் பாபு படிப்பில் திறமைமிக்கவராக விளங்கினார்.  பிலானி பொறியியல் கல்லூரியின்  வேதியியல் பொறியாளர் பட்டப் படிப்பை யும்,  அகமதாபாத் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை முதுகலைப் பட்டப் படிப்பையும்  சிறப்பாகப் படித்துத் தேர்வு பெற்றார்.
வேலையில்லாமல் உள்ள அதிகக் கல்வியறிவு அற்றவர்களுக்கும்,  குறைந்த கல்வி பயின்றவர்களுக்கும் அவர்களது வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உதவும் வழியில் 2006 இல் தனது சொந்த நிறுவனத்தை சரத்பாபு துவங்கினார்.
பணத்தையும் அதிகாரத்தையும் விட உண்மை, நேர்மை, உழைப்பு போன்ற மதிப்பீடுகளுக்கு அவர் முன்னுரிமை அளித்தார்.
2010 பசிப்பிணியற்ற சுதந்திர இந்திய நிறுவனம் என்ற அமைப்பை சரத்பாபு தொடங்கினார். தொடக்கத்தில் 40 ஏதிலிக் காப்பகங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், சிறப்புப் பள்ளி களுக்கும் 10,000 பேர்களுக்கு உணவு வழங்கிய இந்த நிறுவனம் சென்னை, சேலம், கோவை, பவநகர், கோவா ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இந்த ஆண்டு 20,000 பசித்த வயிறுகளுக்கு உணவு அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். பல நாட்கள் நான் பட்டினி கிடந்திருக் கிறேன் என்பதால் பசியின் அருமை என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார்.
உலக இளைஞர் மாநாட்டில் அவர் பேசியபின் அவருடன் இணையத்தில் தொடர்பு கொண்டு 2000க்கும் மேற் பட்டவர்கள் அவரது ஆலோசனையைக் கேட்டுப் பெற்றனர். வறுமையை எதிர்த்துப் போரிட்டு இந்த 30 வயதுக்குள் ஒரு வணிக சாம்ராஜ்யத்தைத் தன்னால் எவ்வாறு நிறுவ முடிந்தது என்பதை அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் அனைவருக்கும் பதில் அளிப்பது சிரமமாக இருந்த போதிலும்  இரண்டு நாள்களில் அவர்கள் அனைவருக்கும் பதில் அனுப்பினேன் என்று அவர் கூறுகிறார். அவரிடம் பணியாற்றுபவர்களில் பெரும் பாலோர் பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்தியவர்கள் அல்லது கொடிய வறுமை யில் உழல்பவர்கள். பல வேலைகளில் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தனது நிறுவனத்தில் அமர்த்திக் கொள்கிறார்.
உலகில் 15 முதல் 24 வயதுக்குட் பட்ட இளைஞரில் 40 விழுக்காட்டினர் எந்த வித வேலையும் அற்றவர்களாக உள்ளனர் என்று உலக தொழிலாளர் அமைப்பு தெரிவிக்கிறது.
இளைஞர்கள் தங்கள் திறமை களைத் தாங்களாகவே வளர்த்துக் கொண்டு தங்களின் எதிர் காலத்தை உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பை தாங்களே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
எனக்கு சரியான வேலை கிடைக்க வில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், சரத்பாபு காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்க்கையில் தாங்களும் முன்னேறி, மற்றவர்களையும் முன்னேறச் செய்வார்களாக!
நன்றி  அய்.பி.என். தொலைக்காட்சி

No comments:

Post a Comment